குஷ்பு கொடுத்த Surprise!!நீட் தேர்வில் சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவன் நெகிழ்ச்சி!!

22 October 2020, 8:03 pm
Kushboo Laptop - Updatenews360
Quick Share

நீட் தேர்வில் வெற்றி பெற்று இந்திய அளவில் 1823வது இடம் பிடித்த தேனி மாணவர் ஜீவித் குமாருக்கு, பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு பரிசு ஒன்று வழங்கியுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வார்பட்டி அரசு மாதிரி பள்ளியல் இரண்டு வருடத்திற்கு முன்பு 12ஆம் வகுப்பு பயின்ற ஜீவித் குமார், கடந்த வருடம் நீட் தேர்வு எழுதி 193 மதிப்பெண் பெற்றார்.

இந்த நிலையில் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலையல் தனியார் நீட் பயிற்சி பள்ளியில் பயின்று மீண்டும் நீட் தேர்வு எழுதி தற்போது 664 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் 1823வது இடம் பிடித்துள்ளார்.

அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களில் அதில இந்திய அளவில் முதல் மாணவனான சாதனை புரிந்த ஜீவித் குமார், தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதனிடையே ஆசிரியை சபரிமாலா, தனது முகநூல் பக்கத்தில் மாணவர் ஜீவித் குமாரை தத்தெடுத்து செலவு செய்து படிக்க வைத்தாக கூறியிருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தனியார் நீட் பயிற்சி பள்ளியில் படித்த ஜீவித் குமாரை, சபரி மாலா தத்தெடுத்து படிக்க வைத்தாக கூறியிருந்ததை சமூக வலைதளங்களில் அறிந்த ஜீவித் குமார் தனது முகநூலில் என்னை என் பெற்றோர் யாரும் தத்துக்கொடுக்கவில்லை என ஆசிரியை சபரிமாலாவுக்கு பதிலடி கொடுத்தார்.

Sabari Mala Student - Updatenews360

இந்த நிலையில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, மாணவர் ஜீவித்குமாருக்கு மடிக்கணினியை வழங்கியுள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகை குஷ்பு, மாணவர் ஜீவித் குமாருக்கு லேப்டாப் பரிசாக வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், அவருடன் பேசி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் பல மடங்கு சாதனைகள் புரிய வேண்டும் என பாஜகவில் இணைந்துள்ள நடிகை குஷ்பு வாழ்த்துகளை தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த செயலுக்கு குஷ்புவுக்கு பலரும் வாழ்த்துகளையும், வரவேற்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 35

0

0