“பைசா பிரயோஜனமில்லாத ஆட்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது”..! உதயநிதியை விளாசிய குஷ்பூ..?

28 October 2020, 8:40 pm
Udhayanidhi_Kushbu_UpdateNews360
Quick Share

வாரிசு அடிப்படையில் திமுகவில் நேரடியாக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினை பைசா பிரயோஜனமில்லாதமர் என குஷ்பூ சாடியுள்ளார்.

எந்த வித  சொந்த அடையாளமும் இல்லாமல் முதலில் சினிமாவில் என்ட்ரி கொடுத்து அங்கு பெரிதாக ஒன்றும் சாதிக்காமல் அரசியலில் குதித்ததவர் தான் உதயநிதி ஸ்டாலின். 

கட்சியின் இளைஞரணி செயலாளர் பொறுப்பை 60 வயதிற்கும் மேலாகியும் நீண்ட காலமாக வைத்திருந்த ஸ்டாலின் ஒரு கட்டத்தில் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றதால், பின்னர் அந்த பொறுப்புக்கு அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கொண்டுவரப்பட்டார்.

இந்நிலையில் கலைஞர் குடும்ப வாரிசு என்ற அடிப்படையில் நேரடியாக பதவிக்கு கொண்டு வரப்பட்டதால், அவர் யாரையும் மதிக்காமல் தான்தோன்றித்தனமாக கருத்துக் கூறி வருவதாக திமுக சீனியர் தலைவர்களே நொந்து கொள்கின்றனர்.

இதற்கிடையே தனது வழக்கமான பாணியில் உதயநிதி ஸ்டாலின் பாஜகவின் குஷ்புவை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்தார்.

இதனால் கடுப்பான குஷ்பூ, “தந்தை பெயரைத் தவிர வேறு எந்த அடையாளமும் இல்லாத, பைசா பிரயோஜனம் பெறாத நபருக்கெல்லாம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குஷ்பூ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் உதயநிதி ஸ்டாலினை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், தற்போது குஷ்பூவை திமுகவினர் அதிகம் விமர்சித்து வரும் நிலையில், குஷ்பூ கூறிய கருத்துக்கள் அனைத்தும் உதயநிதி ஸ்டாலினை குறிவைத்து தான் என அனைவராலும் பேசப்படுகிறது.

1 thought on ““பைசா பிரயோஜனமில்லாத ஆட்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது”..! உதயநிதியை விளாசிய குஷ்பூ..?

Comments are closed.