ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும்: பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நம்பிக்கை

20 September 2020, 7:44 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

” மத்திய அரசின் திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்தும் மாநிலம் தமிழ்நாடு தான். தமிழகத்தில் பாஜக தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும். தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு சென்னை ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும். ரஜினி காந்த் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டாலோ அல்லது ஆன்மீக அரசியல் தொடங்கினாலோ நாங்கள் வரவேற்போம். ரஜினி கட்சி ஆரம்பித்த பின்னர் அவரிடம் கூட்டணி குறித்து பேசுவோம் என்றார்.

Views: - 1

0

0