பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் : மீனாட்சி அம்மன் கோவிலில் மீண்டும் வந்தது!!

4 September 2020, 12:19 pm
Madurai Laddu - Updatenews360
Quick Share

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இன்று முதல் மீண்டும் இலவச லட்டு பிரசாதம் கோவில் நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் நீண்ட தூரம் வெகு வரிசையில் காத்திருக்கும் நிலையை மாற்றுவதற்காக தெற்குக் கோபுர வாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது

100 ரூபாய் கட்டணம் செலுத்தி அம்மன் மற்றும் சுவாமி தரிசனம் செய்யக் கூடிய பக்தர்கள் தெற்கு கோபுர வாயில் வழியாகவும் இலவச தரிசனம் செய்யக் கூடிய பக்தர்கள் அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக அனுமதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

இந்த நிலையில் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் மீண்டும் இலவச லட்டு பிரசாதம் இன்று முதல் விநியோகம் செய்யப்படுவதாக மீனாட்சியம்மன் திருக்கோவில் இணை கமிஷனர் அறிவித்துள்ளார்.

Views: - 0

0

0