பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபர் : குண்டர் சட்டத்தில் கைது

Author: Babu Lakshmanan
1 December 2021, 6:38 pm
Quick Share

கன்னியாகுமரி: இளம்பெண்களின் புகைபடங்களை முகநூல் பக்கங்களில் ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட வாலிபரை குமரி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குமரி மாவட்டத்தில் இரண்டு இளம் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து போலி முகநூல் பக்கங்களில் பதிவு செய்த காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (26) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் அந்த வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் மற்றும் மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆகியோருக்கு பரிந்துரை செய்தனர். அவர்களின் உத்தரவுபடி இன்று மாவட்ட சைபர் கிரைம் போலீசார் குற்றவாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையம்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

மேலும், பெண்களுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் தவறாக பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் எச்சரித்துள்ளார்.

Views: - 424

0

0