சென்னை : சென்னையில் ரவுடியை பிடிக்கச் சென்ற போலீஸாரை, மண்ணெண்ணை ஊற்றி கொலை செய்து விடுவதாக பெண் தாதா மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைந்தகரை அண்ணா ஆர்ச் பகுதியை சேர்ந்த ஆர்ச் வினோத் எனப்படும் ரவுடி வினோத். சென்னையில் அதிக குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளில் ஒருவரான இவர் மீது, இரண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அதேபோல, ரவுடி வினோத்தின் தாயார் லதா (55), அங்கு பெண் தாதா ஆவார். அவர் மீதும் கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக நேற்று இரவு அமைந்தக்கரை உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் 3 காவலர்கள் ரவுடி வினோத் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது, போலீசாரை தள்ளிவிட்டு ரவுடி வினோத் வீட்டினுள் சென்று கதவை மூடிக்கொண்டார். உடனே போலீஸார் வீட்டிற்குள் சென்று அவனை பிடிக்க முயன்றபோது, ரவுடி வினோத்தின் தாய் லதா, 4 காவலர்கள் மீது பெட்ரோலை ஊற்றிவிட்டு தன் மீதும் பெட்ரோலை ஊற்றி கொண்டதுடன், உங்களை இங்கேயே கொளுத்தி விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பதறிப்போன போலீஸார், உடனே அருகில் இருந்த தண்ணீரை எடுத்து தங்கள் மீதும் லதா மீதும் ஊற்றினர்.
பின்னர் போலீஸார் லதாவை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திவிட்டு அவரிடம் எழுதி வாங்கி கொண்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய ரவுடி வினோத்தை போலீஸார் தேடிவருகின்றனர்.
பெண் தாதா லதா போலீஸார் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விடுவேன் மிரட்டல் விடுத்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.