ரூ.10 லட்சம் வழிப்பறி செய்த பெண் காவல் ஆய்வாளருக்கு ஜாமீன் மறுப்பு : 23ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

Author: Babu Lakshmanan
9 September 2021, 5:54 pm
Lady Inspector -Updatenews360
Quick Share

மதுரையில் வணிகரிடம் ரூ.10 லட்சம் பணத்தை பறித்த பெண் காவல் ஆய்வாளருக்கு வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை நாகமலைபுதுக்கோட்டை காவல்நிலைய காவல் ஆய்வாளர் வசந்தி, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அர்ஷத் என்ற வணிகரிடம் 10 லட்சம் ரூபாய் பறித்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 26ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு, மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.

இன்றுடன் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் காணொளி மூலமாக மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தபட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது, விசாரணை முடிவில் பெண் காவல் ஆய்வாளர் வசந்தியின் நீதிமன்ற காவலை வரும் 23ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்

இதனிடையே வசந்தி தரப்பில் ஜாமீன் கோரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

Views: - 329

0

0