நகைக்காக இளம்பெண் கழுதறுத்து கொலையான சம்பவம் : குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறிய அமைச்சர்.!!

13 August 2020, 3:36 pm
Rajendra Balaji - Updatenews360
Quick Share

விருதுநகர் : சிவகாசி அருகே திருத்தங்கலில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தாருக்கு அமைச்சர் நிதி உதவி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பெரியார் காலனியில் கடந்த 8ஆம் தேதி பட்டப் பகலில் ஒன்றரை பவுன் தங்க நகைக்காக திருமணமாகி 45 நாட்களே ஆன இளம்பெண் பிரகதி மோனிகா (வயது 24) என்பவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.

இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிவகாசி கிழக்கு பகுதி காவல்துறையினர் விசாரணை நடத்தி எதிர்வீட்டில் வசிக்கும் பரமேஸ்வரி, அவரது மகன் கோடீஸ்வரன், நண்பர் டைசன் சேகர் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இளம்பெண் படுகொலை சம்பவம் குறித்து தகவலறிந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திருத்தங்கல் சத்யா நகரில் உள்ள பிரகதி மோனிகாவின் தாய் தந்தையரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தனது சொந்த பணம் ரூபாய் 3 லட்சத்தை நிதி உதவியாக வழங்கினார்.

அப்போது கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டுமென குடும்பத்தார் வலியுறுத்தியதை அடுத்து இந்த பாதக செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குடும்பத்தாரிடம் உறுதி அளித்தார்.

Views: - 0

0

0