பல கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு : தி.மு.க பிரமுகரிடம் தீவிர விசாரணை!!

18 September 2020, 8:01 pm
Land Grabbing DMK - updatenews360
Quick Share

நாகை : போலி ஆவணம் மூலம் பல கோடி மதிப்பிலான நிலங்களை அபகரித்ததாக கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் திமுக ஒன்றியச் செயலாளராக உள்ள தாமஸ் ஆல்வலா எடிசன் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நாகை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்க கதிரவன் என்ற வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், வாழக்கரை திமுக கிளைச்செயலாளராகவும், ஊராட்சி மன்றத் தலைவராகவும் உள்ள தலை செழியனுடன் சேர்ந்து தாமஸ் ஆல்வா எடிசன் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் நிலம், சுனாமியால் பாதிப்பட்டவர்களுக்கு அரசு வழங்கிய நிலம் ஆகியவற்றை போலி ஆவணங்கள் மூலம் பல கோடி மதிப்பிலான நிலங்கள் அபகரிப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசனிடம் நாகை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 8

0

0