போலி ஆவணம் தயாரித்து நில அபகரித்த வழக்கு : திமுக எம்எல்ஏ கட்டாயம் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

12 October 2020, 4:47 pm
dmk mla subramanian 1- updatenews360
Quick Share

சென்னை : போலி ஆவணம் தயாரித்து சிட்கோ நிலத்தை அபகரித்த வழக்கில், திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியன் நேரில் ஆஜராக வேண்டும் என்ற சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு விலக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியன், சென்னை மேயராக இருந்த போது, கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் வசித்து வரும் எஸ்.கே கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து, தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, பார்த்திபன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார், திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து, சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக, நேரில் ஆஜராகுமாறு மா.சுப்ரமணியனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நில அபகரிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க மறுப்பு தெரிவித்ததுடன், மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Views: - 49

0

0