கொடைக்கானலில் தொடர் கனமழை: 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு…போக்குவரத்து பாதிப்பு..!!

Author: Aarthi Sivakumar
24 October 2021, 11:57 am
Quick Share

கொடைக்கானல்: கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக அடுக்கம் நெடுஞ்சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் பெய்த மழை காரணமாக அடுக்கம் நெடுஞ்சாலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்டுப் பல இடங்களில் சாலைகள் மூடியுள்ளதால் நகருக்குள் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

கொடைக்கானல்: 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு

கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக அமைக்கப்பட்ட கொடைக்கானல் அடுக்கம்-பெரியகுளம் சாலை பகுதிகளில் அதிக வெள்ளோட்டம் ஏற்பட்டதால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அடுக்கம் செல்லும் வழியில் இரண்டு இடங்களிலும், அடுக்கத்தைத் தாண்டி 15க்கும் மேற்பட்ட இடங்களிலும் மண்சரிவும், சாலை பெயர்ந்தும் காணப்படுகிறது. இதனால் அடுக்கம் கிராம மக்கள் பெரியகுளம் நகருக்கும் மற்றும் கொடைக்கானல் நகருக்கும் செல்ல முடியாமல் நடுவில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் இன்று காலை முதலே சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Landslide in more than 20 places || கொடைக்கானல்: நெடுஞ்சாலையில் 20க்கும்  மேற்பட்ட இடங்களில் மண்சரிவு

Views: - 273

0

0