அடையாளம் தெரியாமல் இருக்க பிளாஸ்டிக் சர்ஜரி.! கோவையில் அங்கத்தை மாற்றிய அங்கொட லொக்கா.!

12 August 2020, 12:04 pm
Angoda Lokka Plastic Surgery - Updatenews360
Quick Share

கோவை : பிரபல கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா பிளாஸ்டிக் சர்ஜரி தன் முகத்தை மாற்றியதற்கான ஆதாரம் சிக்கியது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இலங்கையில் இருந்து தப்பி வந்த பிரபல கள்ள கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா கோவையில் பதுங்கியிருந்தான். பல்வேறு குற்ற சம்பவங்களில் தேடப்படும் குற்றவாளியான இவன் அங்கோட லொக்கா என்ற தன் பெயரை பிரதிப் சிங் என மாற்றி சிவகாமி சுந்தரி மற்றும் தியானேஷ்வரன் ஆகியோரின் உதவியுடன் தன் காதலியான அம்மானி தாஞ்சியுடன் சேர்ந்து போலி ஆதார் கார்டை தயாரித்து கோவை வசித்து வந்தான்.

இந்த நிலையில் தன் பெயரை மாற்றிய அங்கொட லொக்கா சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளி என்பதனால் தன் முகத்தை அடையாளம் காணக் கூடாது என்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக சி பி சி ஐ டி விசாரணையில் தெரியவந்தன.

கடந்த பிப்ரவரி மாதம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூக்கை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த நிலையில் பிளாடிக் சர்ஜரி செய்யும் முன் எடுக்கப்பட்ட புகைப்படத்தோடு ஒப்பிடுகையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பின் தோற்றம் நன்றாகவே மாறியுள்ளது. குறிப்பாக தன் முகத்தில் புதுமையான பொழிவுடன் பழைய அடையாளம் ஏதும் தெரியக்கூடாது என்கிற வகையில் அத்தோற்றத்தினை அங்கொட லொக்கா மாற்றியதற்கான அனைத்து விதமான ஆதாரங்களும் காணப்படுகின்றன.

வழக்கமாக திரைப்படங்களில் இது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம். ஆனால் திரைப்படத்தையே மிஞ்சும் அளவுக்கு அங்கொட லொக்காவின் செயல்பாடுகள் இருக்கின்றன. இந்த கள்ள கடத்தல் மன்னன் இறப்பு தொடர்பாக சிவாகாமி சுந்தரி, தியானேஷ்வரன், அம்மானி தாஞ்சி உள்ளிட்டோர் விசாரணைக்கு உட்படுத்த சி பி சி ஐ டி மனு மீதான விசாரணை கோவை நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்காக மூன்று பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டனர்.