புதிய அரசு கட்டிடத்தில் பெரியதாக பொறிக்கப்பட்ட துரைமுருகன் பெயர் : நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை மிரட்டிய திமுகவினர்!!

Author: Udayachandran
10 October 2020, 1:41 pm
Durai - Updatenews360
Quick Share

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் புதியதாக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இது காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனின் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ளது.

நுழைவு வாயிலின் முகப்பில் பள்ளியின் பெயரை விட பெரிய எழுத்தில் நிதி உதவி துரைமுருகன் எம்எல்ஏ என்று பெயர் பொறிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர், அரசு நிதியில் கட்டப்பட்டுள்ளதை மறைத்து துரைமுருகன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் துரைமுருகன் பெயர் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்னர். இந்த நிலையில் நுழைவாயிரை திறந்து வைக்க வநத் எம்எல்ஏக்கள் காந்தி, நந்தகுமார் ஆகியோர் துரைமுருகன் எம்எல்ஏவின் பெயர் மீது உள்ள ஸ்டிக்கரை கிழித்து போட்டனர்.

இதையடுத்து அந்த நுழைவாயிலை காட்பாடி எம்எல்ஏ துரைமுருகன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எம்எல்ஏ நந்தகுமார்,இன்னும் சில மாதங்களில் ஆட்சி மாறும்இ, அப்போது துரைமுருகன் பெயர் மீது ஸ்டிக்கர் ஒட்டிய அரசு அதிகாரி வீட்டிற்கு போக தயாரா இருக்க வேண்டும் என ஒருமையில் பேசினார்.

இதனால் சர்ச்சை ஏற்பட்டது மட்டுமல்லாமல், திமுகவினரால் கிழிக்கப்பட்ட ஸ்டிக்கரை மீண்டும் ஒட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு தைரியம் இருக்கா என கேட்டார். திமுகவினரின் இந்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை பிடிப்பது திமுகதான் என தேர்தல் வருவதற்கு முன்னரே உடன்பிறப்புகள், இம்மாதிரியான செயலில் ஈடுபட்டுள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 77

0

0