இந்தாண்டின் கடைசி ஜல்லிக்கட்டு… நெருஞ்சிப்பட்டியில் வாடிவாசலை சீறிப்பாய்ந்த காளைகள் ; அடக்க முயலும் காளையர்கள்..!!

Author: Babu Lakshmanan
31 May 2023, 11:40 am
Quick Share

இந்தாண்டில் கடைசி ஜல்லிக்கட்டு நெருஞ்சிப்பட்டியில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை நெருஞ்சிப்பட்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 700 காளைகள் பங்கேற்றுள்ளன. 300 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்குவதற்கு தயாராக இருக்கின்றனர். வாடி வாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளை காளையர்கள் அடக்கி வருகின்றனர்.

பல காளைகள், காளையர்களின் பிடியில் சிக்காமல் வீரர்களை திணறடித்து தப்பித்துச் சென்றது சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கியது. வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் இந்த ஆண்டின் கடைசி ஜல்லிக்கட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி மே 31 வரை தான் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பது விதி. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு 75 ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு ஆகியவை நடைபெற்று உள்ளது.

கடந்த ஆண்டுகளின் நூற்றுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு வடமாடு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு போட்டிகள் குறைவாக தான் நடைபெற்றுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் போட்டி நடத்துவதற்கு பல்வேறு கெடுபிடிகளை உச்சநீதிமன்றம் விதித்துள்ளதால், விழா ஏற்பாட்டார்கள் அதனை பூர்த்தி செய்ய முடியாததால் அனுமதி மாவட்ட நிர்வாகத்தால் மறுக்கப்படுகின்றது.

Views: - 368

0

0