உதயமாகிறது லதா ரஜினிகாந்த்தின் புதிய அரசியல் கட்சி : காஞ்சி காமாட்சி கோவிலில் மகள் சிறப்பு பூஜை!!

29 January 2021, 10:39 am
Latha Rajini New Party- Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : லதா ரஜினிகாந்த் துவங்க இருக்கும் புதிய கட்சி வெற்றியடைய வேண்டும் என காமாட்சி அம்மன் கோவிலில் அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சங்கல்பம் செய்து பிரார்த்தனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் டிசம்பர் மாதம் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருந்தார். கட்சி துவங்குவதற்கு முன்னதாக தான் நடித்துக்கொண்டிருக்கும் படத்தினை நடித்து முடித்துவிட்டு கட்சியை துவங்கலாம் என்று எண்ணியபோது அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது .

Will financial default cases against his wife come to haunt Rajinikanth? -  The Week

ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் ரஜினிகாந்திடம் ரத்த அழுத்தம் சீராக இல்லாததால் உங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினர்.

அதனை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் விதமாக கடந்த மாதம் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டேன் என்றும், வேதனைக்கு ஆளாக்க வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வந்து சிறப்பு தரிசனம் செய்தார். இதில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆரம்பிக்கப் போகும் புது கட்சி வெற்றி அடைய வேண்டுமென சிறப்பு பூஜை செய்யப்பட்டு சங்கல்பம் செய்ததாக கூறப்படுகிறது.

இன்னும் ஒரு சில நாட்களில் லதா ரஜினிகாந்த் ஆரம்பிக்கப் போகும் கட்சி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0