24 மணி நேர குடிநீர் திட்டம்: கோவையில் முதல்முறையாக வாடிக்கையாளர் சேவை மையம் துவக்கம்..!!

Author: Aarthi Sivakumar
2 October 2021, 1:36 pm
Quick Share

கோவை: கோவை மாநகராட்சியின் 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் முதல்முறையாக வாடிக்கையாளர் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் முதல்முறையாக வாடிக்கையாளர் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. கோவை, மேட்டுப்பாளையம் ரோடு, காமராஜபுரம் சிக்னல் அருகே உள்ள மாநகராட்சி வரி வசூல் மையத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை செயல்படும் இம்மையத்தை, சந்திரா யுவா பவுண்டேசன் தலைவர் சசிகலா துவக்கி வைத்தார்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் கூறுகையில், ‘குடிநீர் வினியோகம் குறித்த அனைத்து சேவைகளும் வழங்கப்படும். புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல், குடிநீர் குழாய்களில் கசிவு, மாசு கலந்த நீர், குடிநீர் பற்றாக்குறை என குடிநீர் சார்ந்த புகார்கள் அளிக்கலாம்.

குடிநீர் கட்டணத்தை ரொக்கமாகவோ, கிரெடிட் கார்டு மூலமாகவோ, மொபைல் செயலி அல்லது தானியங்கி இயந்திரங்கள் மூலமாகவோ செலுத்தும் வசதி விரைவில் துவக்கப்படும். 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் அவசியம், செயல்முறை, கட்டணம் உள்ளிட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்’ என்றார்.

குடிநீர் திட்ட மேலாண்மை ஆலோசகர் கோபாலகிருஷ்ணன், மாநகராட்சி உதவி நிர்வாகப் பொறியாளர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Views: - 454

0

0