பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தூக்கிலிட சொன்னது திமுக தான்: அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு…!!

11 November 2020, 1:51 pm
cv 2 - updatenews360
Quick Share

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பானாம்பட்டு பகுதியில் ரூ.263.00 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்கான பூமி பூஜையினை அமைச்சர் சி.வி சண்முகம் தொடங்கி வைத்தார்.

விழுப்புரத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த எங்களை விட யாருக்கும் அக்கறை இருக்க முடியாது, ஸ்டாலின் இதில் நீலி கண்ணீர் வடிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

அப்போலோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் பெற்றுள்ள தடை ஆணையை நீக்க அதிமுக அரசு முயற்சித்து வருவதாகவும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றி பேச திமுக விற்கு தகுதி இல்லை, அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற வேண்டும் என்று சொன்னது திமுக தான் அமைச்சர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆளுநர் கையெழுத்திற்காக காத்திருந்தோம் தாமதம் ஆன நிலையில் அரசுக்கு உட்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி 7.5 % அரசாணை வெளியிட்ட ஒரே முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தால் வீரமாக பேசுவது ஆளும் கட்சியாக இருந்தால் பின் வாங்குவது, ஆளுநரை எதிர்த்து போராட்டத்தை அறிவித்த ஸ்டாலின் பின்வாங்கியது ஏன் என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழகத்தின் உரிமை என்று வரும்போது அதிமுக என்றும் உரிமையை விட்டு கொடுக்காது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

Views: - 39

0

0