ரூ.10க்கு சிக்கன் பிரியாணி…கடையில் குவிந்த மக்கள் கூட்டம்..உரிமையாளர் மீது வழக்குப்பதிவு..!!

18 October 2020, 8:21 pm
arupu - updatenews360
Quick Share

அருப்புக்கோட்டை: கடை திறப்பு விழா சலுகையாக 10 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்த கடையில் மக்கள் கூட்டம் சேர்ந்ததால் கடையின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடை திறப்பு விழா சலுகையாக ரூ.10 நாணயம் கொண்டு வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி என சலுகை அறிவிக்கப்பட்டது.

இதனால், மக்கள் கொரோனாவையும் மறந்து 10 ரூபாய் நாணயத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் கடை முன்பு திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பிரியாணிக்காக தனிநபர் இடைவெளியை காற்றில் பறக்க விட்ட மக்களை கூட்டத்தை போலீசார் கலைத்தனர். மேலும், சலுகை அறிவித்து மக்களை கூட்டத்தை திரட்டிய கடையின் உரிமையாளர் மீது, தொற்று நோய் பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பிரியாணி அண்டாக்கள் முதியோர் இல்லத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.