யோகா ஆசிரியை கடத்தி கழிவறைக்குள் புதைத்த வழக்கறிஞர் : கடிதம் எழுதி வைத்து தற்கொலை.. மதுரையில் பரபரப்பு!!

4 May 2021, 7:18 pm
Lawyer Suicide - Updatenews360
Quick Share

மதுரை : திருமங்கலம் அருகே வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்துக்கும் மாயமான யோகா ஆசிரியை கொலை வழக்கிற்கும் தொடர்புடைய கடிதம் சிக்கியது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் உள்ள ஆறுமுகம் நகர் பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன்(வயது 42). இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் அவரது வீட்டில் தன் கையால் எழுதப்பட்ட 10 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த கடிதத்தில் மாயமான பெண்ணை தனது வீட்டின் கழிவறைக்குள் வைத்து, கொன்று புதைத்து விட்டதாகவும் இதனால் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கடந்த (ஏப்ரல்)மாதம் 2-ஆம் தேதி, பசும்பொன் தெரு – வில் உள்ள யோகா ஆசிரியை சித்ராதேவி (32) இரு சக்கர வாகனத்துடன் மாயமான நிலையில், ஆசிரியையை வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் கடத்தி வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும், சித்ரா தேவியின் தந்தை கண்ணையா காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் , நீதிமன்றத்தை நாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. வழக்கறிஞரே பெண்ணை தனது வீட்டில் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 176

0

1