நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் பங்கேற்கும் முக்கிய பிரபலங்கள் : ரசிகர்களுக்காக சூப்பர் விஷயத்தை கையில் எடுக்க முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2022, 3:39 pm
Nayanthara Vikki Marriage - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரா வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், விமர்சனங்களை தூக்கி எறிந்து வெற்றி கொடி நாட்டியவர். தற்போது தமிழ் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகயாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

Nayanthara And Vignesh Shivan's Love Story: From Accepting Love At An  Awards Show To Secret Marriage

இவர் நீண்ட வருடமாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் எப்போது திருமணம் செய்வார்கள் என காத்திருந்த ரசிகர்களுக்கு அண்மையில் இவர்களின் திருமண அழைப்பிதழ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது,

Nayanthara and Vignesh Shivan to get married on June 9 in Tirupati? -  Movies News

இவர்களது திருமணம் வருகின்ற ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் கோலாகலமாக நடைபெற உள்ளது என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரின் திருமணம் சென்னை அருகில் உள்ள மகாபலிபுரத்தில் இருக்கிற பிரைவேட் ரிசார்ட் ஒன்றில் ஜூன் 9-ஆம் தேதி காலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் கழுத்தில் முடிச்சு போடும் தருணம் நிகழவுள்ளது.

Nayanthara and Vignesh Shivan to get married in Mahabalipuram | Nayanthara  and Vignesh Shivan Marriage

மேலும் இவர்களது திருமணத்திற்கு சினிமா மற்றும் முக்கிய பிரமுகர்களாக மொத்தமாகவே 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரபலங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய் உள்ளிட் மொத்தம் 30 பேருக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைப்பு விடுக்கின்றனர்.

Are Nayanthara and Vignesh Shivan getting married? - Movies News

மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜூன் 8ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனால் ஜுன் 8 மற்றும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் திருமண நிகழ்வுகளை ஓடிடி தளத்தல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Video: Nayanthara and Vignesh Shivan's marriage confirmed! Lovebirds  arrived together to visit the ancestral temple – PressWire18

இவர்களின் திருமணத்திற்கு மொத்தம் 200 புள்ளிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக திருமணத்தை நடத்தி முடிக்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.

Views: - 950

13

1