தடுப்பு சுவர் மீது ஏறிச் செல்லும் சிறுத்தை : காட்டிக்கொடுத்த லாரி ஓட்டுநர்!!

25 October 2020, 3:47 pm
Leopard - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை தடுப்பு சுவர் மீது நடந்து செல்லும் சிறுத்தையின் காட்சி வைரலாகி வருகிறது.

தமிழக – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் திம்பம் மலைப்பாதை 26வது கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்புச் சுவற்றில் நேற்றிரவு சிறுத்தை ஒன்று நடந்து செல்லும் காட்சி சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுத்தை நடந்து செல்லும் காட்சியை அவ்வழியாக வந்த லாரி ஓட்டுனர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.

திம்பம் மலைப்பாதையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகளின் நடமாட்டம் சாலையில் அதிகரித்து விட்டதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Views: - 18

0

0