மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வலம் வரும் சிறுத்தை புலி: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை!!

Author: Aarthi Sivakumar
25 August 2021, 6:52 pm
Quick Share

சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறுத்தை புலி ஒன்று நடமாடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சத்தியமங்கலம் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஆசனூர் வனப்பகுதியில், நெடுஞ்சாலையை ஒட்டி சிறுத்தைப்புலி ஒன்று நடமாடி வருகிறது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

காரில் வந்த பயணி ஒருவர் தனது செல்போனில் சிறுத்தை நடமாட்டத்தை படம் பிடித்துள்ளார். ஆசனூர் பகுதியில் யானை மற்றும் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து, அடிக்கடி சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Views: - 307

0

0