சோலையாறு அணை பகுதியில் அதிகரிக்கும் சிறுத்தை நடமாட்டம்: பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

Author: Rajesh
6 August 2021, 9:30 am
Quick Share

கோவை: வால்பாறையில் சோலையாறு அணை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தற்போது சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து தினந்தோறும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து செல்வது வாடிக்கையாகி வருகிறது. அதேபோல வால்பாறை நகர்பகுதிகளிலும் அதே நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை பகுதியில் உள்ள கிரீன் காட்டேஜ் என்ற ஒரு தனியார் தங்கும் விடுதியில் இரவு புகுந்த ஒரு சிறுத்தை எந்த வித அச்சமுமின்றி அவ்வழியாக நடந்து சென்றுள்ள காட்சி அப்பகுதியில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

மேலும், சிறுத்தைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 711

0

0