தனியார் தங்கும் விடுதிக்குள் அழையா விருந்தாளியாக வந்த சிறுத்தை : ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2021, 3:44 pm
Leopard - Updatenews360
Quick Share

நீலகிரி : தனியார் தங்கும் விடுதிக்குள் அன்ன நடை போட்ட சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதிக்குள் புகுந்த சிறுத்தை சாவுகாசமாக நடமாடிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகின,

தங்கும் விடுதியில் கதவு திறந்திருந்ததை பார்த்த சிறுத்தை உள்ளே புகுந்தது வரவேற்பறையின் வாசலில் நோட்டமிட்டு ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்து உள்ளே வந்தது. பின்னர் சமையலைற வரை சென்ற சிறுத்தை பின்னர் வெளியேறியது.

இது தொடர்பான காட்சி வெளியாகி சுற்றுலா பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 304

0

0