கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வரும் தமிழகம்: 200க்கும் கீழ் குறைந்த பாதிப்பு…3 பேர் பலி..!!

Author: Rajesh
6 March 2022, 9:26 pm
TN corona -Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 013 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 554 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 50,298 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 449

0

0