கரூர்: இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் விரைவில் கையகப்படுத்தப்படும் என திருத்தொண்டர் சபை நிறுவனத்தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு, திருத்தொண்டர் சபை நிறுவனத்தலைவர் ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். அப்போது, ஆலயத்தில் உள்ள சிவனடியார்களை சந்தித்து நலமறிந்த அவர், பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது தமிழகத்தில் சுமார் 4000 ஏக்கர் இந்த மாவட்டத்தில் திருக்கோயிலுக்கு சொந்தமாக உள்ளது. இந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காக 2012ஆம் ஆண்டு முதல் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பல்வேறு ஆய்வுகள் மற்றும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இந்து அறநிலையத்துறை வருவாய் துறை பத்திரப்பதிவுத்துறை காவல்துறை மின்வாரியம் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக ஒருங்கிணைத்து நடவடிக்கை தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. ஆலய சொத்துக்கள், நிலங்கள் ஏராளமானவை இருந்த நிலையில் ஒன்றன் பின் ஒன்றாக மீட்கப்பட்டு வருகின்றன.
விரைவில் கோயில் நிலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு விடும், ஆலயத்தின் நிலம் ஆலயத்திற்கே தான் சொந்தம், ஆகையால் மக்களும் முன் வரவேண்டும். கரூர் மாவட்டத்தில் திருக்கோயில் சொத்துக்களை தெரியாமல் அனுபவிக்கின்றார்களா அவர்கள் அத்தனைபேரும் வாடகைதாரர்கள் ஆக முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் சட்டப் பாதுகாப்பு அளிக்கப்படும்.
திருக்கோயிலுக்கு தொகை செலுத்த முன்வந்தால் வாடகைதாரர் ஆக கண்டிப்பாக அங்கீகரிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. இதனால் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் ஆகவே, மீட்க கூடிய நிலையில், யாரேனும் இடைத்தரகர்களாக செயல்பட்டு இதனை நான் மீட்டுத்தருகின்றேன் என்றால் அவரை யாரும் நம்ப வேண்டாம்.
இந்து சமய அறநிலையத்துறை நிலங்கள் யாவும் கோயிலுக்கு தான் சொந்தம், ஆகவே, மக்கள் சிந்திக்க வேண்டும், இந்து சமய அறநிலையத்துறை நிலங்களை மக்களுக்கு கொடுக்க அரசுக்கே அதிகாரம் இல்லை, ஆகவே, சிவன் சொத்து குல நாசம், என்று உணர்ந்திட வேண்டும்.
நூற்றுக்கணக்கான ஆலயங்கள் கரூர் மாவட்டத்தில் பழுதுபட்டு உள்ளது, நிறைய சிலைகள் காணாமல் போயுள்ளது. இவைகளை கண்டறிய இதற்காக தனி குழு அமைக்கப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ஏற்கனவே முதல் நிலை அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குற்றத்திற்கு உடந்தையாக இருந்தால் அலுவலர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் யாரும் தப்பிக்க முடியாது. அதிகாரிகள் உயர் அலுவலர்கள் ஆதரவு உள்ளது. அரசியல்வாதிகள் ஆதரவு உள்ளது., ஆளுங்கட்சி ஆதரவு உள்ளது.,
இதுமட்டுமல்லாது பெரிய போராட்டங்களை நடத்தி தவிடு பிடி ஆக்கி விடலாம் என எண்ணங்களெல்லாம் சட்டத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கரு உருவாகின்ற ஊர் என்று புராதான மிக்க கரூர் மாநகரம் பஞ்சலிங்க மூர்த்தி ஸ்தலம் ஆகும், ஆனால் இங்குள்ள பஞ்சலிங்கத்தில் ஒரு லிங்கத்தினை காணவில்லை. இது குறித்து அரசிற்கு முதல் நிலை அறிக்கை தாக்கல் செய்து விசாரணை நடத்தப்படும். விரைவில் காணாமல் போன லிங்கம் ஆலயத்திற்கு வந்தடையும் அதுவரை நாங்கள் போராடுவோம் என்றார்
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.