எந்தச் சூழ்நிலையையும் சமாளிப்போம் : இலங்கை குறித்து நடிகை லாஸ்லியா உணர்ச்சிகரமான பதிவு..!

Author: Rajesh
6 April 2022, 10:44 am
Quick Share

லாஸ்லியா மரியநேசன் இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவரின் அழகான இலங்கை தமிழால் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் நடிகர் கவின் இருவரின் இடையே காதல் மலர்ந்தது. லாஸ்லியாவின் தந்தை காதலை எதிர்த்ததால் இருவரும் காதலை கைவிட்டனர். பிக்பஸ்ஸிலிருந்து வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் துடங்கிய லொஸ்லியா கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார். சோசியல் மீடியாக்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இலங்கையில் கடும் பொருளாதார தட்டுப்பாடு நிலவி வருவது நம் அனைவருக்கும் தெரியும், இதுகுறித்து ஒரு உணர்ச்சிகரமான பதிவை போட்டுள்ளார் லாஸ்லியா. அதில் நாங்கள் மிகவும் மோசமான போரை எதிர்கொண்டவர்கள், அந்த போரில் நாங்கள் எங்கள் குடும்பங்கள் உட்பட அனைத்தையும் இழந்தோம், மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய சுனாமியை எதிர்கொண்டோம்.

2019 இல் தேவாலயங்களில் குண்டுவெடிப்புகளை எதிர்கொண்டோம், கொரோனா மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றோம். இது எங்களுடைய தவறு அல்ல, இலங்கை மண்ணில் பிறந்ததால் இதனை நாங்கள் எதிர்கொள்கிறோம். ஒவ்வொரு சூழ்நிலையிலும், இவை அனைத்தையும் கையாளும் அளவுக்கு நாங்கள் பலமாக இருந்தோம். இப்போது, உள்ள இந்த பொருளாதார சூழ்நிலையை சமாளிக்க ஒன்றாக இருப்போம், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம். என பதிவு செய்துள்ளார்.

Views: - 436

0

0