‘உங்கள் மீதான மதிப்பு அப்படியே இருக்கும்‘ : காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு சோனியாவுக்கு கடிதம்!!

Author: Udayachandran
12 October 2020, 10:36 am
Kushboo 1 - Updatenews360
Quick Share

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து குஷ்பு நீக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு விலகினார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு பாஜகவில் இன்று இணையவுள்ளதாக தகவல் பரவியது. டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா தலைமையில் இணையவுள்ளதாக செய்திகள் பரவியது. இந்த நிலையல் காங்கிரஸ் கட்சி தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து குஷ்பு நீக்கப்பட்டார்.

முன்னதாக பாஜகவில் இணைவதற்காக டெல்லி புறப்பட சென்னை விமான நிலையம் வந்த குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இருக்கறீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாகாந்தி மற்றும் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோரை சந்திக்க குஷ்பு நேரம் கோரியிருந்தார். ஆனால் நேரம் ஒதுக்கப்படாததால் டெல்லிக்கு சென்ற அவர் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் சென்னை வந்த குஷ்புவிடம் எல்.முருகன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து குஷ்பு நீக்கப்பட்டார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக குஷ்பு அறிவித்துள்ளார்.

இது குறித்து சோனியா காந்திக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பிய என்னை போன்றர்களை காங்கிரஸ் கட்சியின் உயர் பதவியில் இருப்பவர்கள் ஒடுக்குகின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பணம் புகழை பெறுவதற்காக நான் காங்கிரசில் சேரவில்லை என்றும், நீண்ட யோசனைக்கு பின்பே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். எப்போதும் உங்கள் மீதான மதிப்பு அப்படியே இருக்கும் என தெரிவித்துள்ள குஷ்பு, ராகுல்காந்தி உள்ளிட்ட மூத்த தலைவருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

Views: - 49

0

0