மனிதனின் அறிவுக் களஞ்சியம் : 75 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் திறக்கப்பட்ட நூலகங்கள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2021, 10:28 am
Library Open -Updatenews360
Quick Share

சென்னை : தமிழகம் முழுவதும் 75 நாட்களுக்கு பிறகு இன்று நூலகங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன.

கொரோனா தொற்றால் தமிழகத்தில் மூடப்பட்ட நூலகக்ஙள் இன்று முதல் நூலகங்கள் திறக்க பொது இயக்குநகரகம் அனுமதி வழங்கியுள்ளது. ஏராளமானோர் வைத்த கோரிக்கைகளை ஏற்று 75 நாட்களுக்கு பிறகு நூலகங்கள் திறக்கப்படுகின்றன.

கொரோனா முடக்கம் காரணமாக மூடப்பட்ட நூலகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நூல்களை நேரடியாக வாசகர்கள் எடுக்க அனுமதி இல்லை. பணியாளர்களே எடுத்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

65 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுவோர்களை கருத்தில் கொண்டு நூலகங்கள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசகர்கள், பணியாளர்கள் கிருமிநாசினி பயன்படுத்துவதோடு முகக்கவசம் அணிவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 182

0

0