கள்ளக்காதல் விவகாரம்:காதலியின் கணவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

Author: Udhayakumar Raman
7 December 2021, 8:34 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திண்டுக்கல் அருகேயுள்ள எரியோடு ஒத்தக்கடை யைச் சேர்ந்தவர் கலைவேந்தன். இவரது மனைவி அமுதா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட கலைவேந்தனை கடந்த 2016ஆம் ஆண்டு கல்லால் அடித்த கொலை செய்துள்ளார். இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஜமுனா, குற்றவாளி துரைப்பாண்டிக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.இதையடுத்து அவர் போலீசார் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்து சென்றனர்.

Views: - 324

0

0