விஷ சாராய மரண ஓலத்தின் எதிரொலி: ஒரே நாளில் வேட்டையாடப்பட்ட 50 சாராய வியாபாரிகள்..!

Author: Vignesh
21 June 2024, 1:15 pm
arrested
Quick Share

கள்ளக்குறிச்சி சம்பளம் எதிரொலியாக இன்று ஒரே நாளில் வேலூர் மாவட்டம் முழுவதும் வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் டிஎஸ்பிக்கள் அனைத்து மதுவிலக்கு மற்றும் தாலுக்கா காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இன்று சாராயவேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட சாராய வேட்டையில் மொத்தமாக சுமார் 2400 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், சுமார் 667 லிட்டர் கள்ளச்சாராயம், 431 மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்ட கள்ளச்சாராய வேட்டையில் விற்பனை செய்ததாக
65 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக மாவட்ட முழுவதும் 50 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

மேலும் இதுபோன்று தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Views: - 267

0

0