சென்னையில் மதுபானக்கடைகள் 18ம் தேதி முதல் திறப்பு : நாளொன்றுக்கு எத்தனை டோக்கன்கள் விநியோகம் தெரியுமா..?

16 August 2020, 8:35 pm
Quick Share

சென்னை: சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் வரும் 18ம் தேதி முதல் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் கடந்த மே 07ம் தேதி முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் வரும் 18ம் தேதி முதல் திறக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் அறிவித்துள்ளது.

மேலும் மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி இல்லை என்றும், டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கப்பட்டு, நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணியவேண்டும் மற்றும் தனி மனித இடைவெளி கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.