பேர்ணாம்பேட்டு பகுதியில் சத்தத்துடன் கூடிய லேசான நிலஅதிர்வு ; பொதுமக்கள் பீதி… வருவாய்த்துறையினர் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
10 November 2022, 10:00 am
Quick Share

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் சத்தத்துடன் கூடிய லேசான நில அதிர்வு உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள தரைக்காடு பகுதியில் நேற்று மதியம் அதிக சத்தத்துடன் கூடிய லேசான நில அதிர்வு உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லேசான நில அதிர்வால் எந்தவித பாதிப்புகளும், பொருட் சேதங்களும் ஏற்படவில்லை என வருவாய் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், ஒரு சில வீடுகள் லேசான விரிசல் விடப்பட்டதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு இதே பகுதியில் தொடர்ந்து சில நாட்கள் நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர் மழைக்காலங்களில் இந்த பகுதியில் நில அதிர்வு ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Views: - 534

0

0