அது சாதா பூனை இல்லடா சிறுத்தை பூனை : டீ கடைக்கு பால் குடிக்க வந்த Leopard Cat!!
Author: Udayachandran RadhaKrishnan21 December 2021, 5:23 pm
நீலகிரி : குன்னூர் பேருந்து நிலையதில் உள்ள டீ கடையில் புகுந்த சிறுத்தை பூனையை வனத்துறையினர் பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த சிறுத்தை பூனைக் குட்டி ஒன்று பேருந்து நிலையத்தில் இருந்த தனியார் டீக்கடைக்குள் புகுந்தது.
இதையடுத்து பூனையை என நினைத்து கடையில் இருந்தவர்கள் அதனை விரட்ட முயன்ற போது, அவர்களை தாக்கி சீறியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கடை உரிமையாளர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் சிறுத்தை பூனைக் குட்டியை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து சிறுத்தை பூனைக் குட்டியை வனத்துறையினர் பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
0
0