வீட்டில் இருந்தே சமயபுரம் மாரியம்மன் அபிஷேகத்தை காணலாம்.! இணையதள முகவரி அறிவிப்பு!!

15 August 2020, 7:34 pm
Samayapuram Temple - Updatenews360
Quick Share

திருச்சி : உலக மக்களை காக்கவும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும் ஆவணி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் புகழ்பெற்ற அம்மன் ஸ்தலமாகும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 144 ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் 25 ந்தேதி கோயில் நடை அடைக்கப்பட்டு பக்தர்களை அனுமதிக்கவில்லை.

வழக்கம்போல் தினந்தோறும் அம்மனுக்கு குருக்கள்கள் பூஜை செய்து வருகின்றனர்.இந்நிலையில் உலக மக்களை காக் கவும்,கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும் ஆவணி அமாவாசையை முன்னிட்டு வரும் 18 ந்தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை சிறப்பு அபிஷகம் மற்றும் பூஜைகள் 5 குருக்கள் கொண்ட குழு மூலம் நடைபெறுகிறது. தற்போது கோயில் நடையடைக்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

பக்தர்கள் பாதுகாப்பாக வீட்டிலிருந்து அம்மனுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜையை நேரலையில் கண்டு தரிசிக்க கோயிலின் இணையதளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இணையதள முகவரி
www.Samayapurammariammantemple.org, www.tnhrce.gov.in