கோவை ஆர் எஸ் புரம் வீசிவி லே அவுட் பகுதியில் கோவையின் பிரபல உணவகமான கோவை பிரியாணி ஹோட்டல் அமைந்துள்ளது.அங்கு மதியம் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து உணவருந்தி செல்கின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் வந்து நேற்று பிற்பகல் அங்கு பிரியாணி உட்கொண்டுள்ளார். அப்போது பிரியாணிக்கான குழம்பு வாங்கிய போது அந்த குழம்பில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்தது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையும் படியுங்க: அண்ணா பல்கலை., வழக்கில் தீர்ப்பு… யாரை காப்பாற்ற இந்த வேகம்? எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..!!
இதை அடுத்து பல்லியை காண்பித்து உணவக ஊழியர்களிடம் முறையிடவே உணவக ஊழியர்கள் அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டு பல்லியை அப்புறப்படுத்த முற்பட்டதால் ஆத்திரமடைந்த அவர், உணவக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து அங்கு வந்த உணவகம் மேலாளர் இது குறித்து ஊழியர்களிடம் விசாரிப்பதாகவும் பிரச்சனை செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். இருப்பினும் அங்கு உணவருந்தி கொண்டிருந்த மற்ற வாடிக்கையாளர்களிடம் பல்லி கிடந்தது குறித்த தகவலை கூறவே அனைவரும் உணவருந்துவதை விட்டு பாதியில் எழுந்து அங்கேயே வாந்தி எடுக்க துவங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவராக தாங்கள் வந்த வாகனத்திலேயே உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கும் அரசு மருத்துவமனைக்கும் சென்று அனுமதி பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அங்கு உணவு அருந்திய வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். பிரபல உணவகத்தில் பரிமாறப்பட்ட உணவில் பல்லி கிடந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.