21 வயது ஒருபுறம்… 90 வயது மூதாட்டி மறுபுறம்… ஊராட்சிமன்ற தலைவியாக பதவியேற்றுக் கொண்ட பெண்கள்..!!!

Author: Babu Lakshmanan
20 October 2021, 5:39 pm
panchayat leaders - updatenews360
Quick Share

தென்காசி : ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற இளம் பெண்கள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றுக் கொண்டனர்.

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்டத்தில் 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 144 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், 221 ஊராட்சி மன்ற தலைவர்கள், 1905 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 2284 நபர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

இதில், கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் லெட்சுமியூர் பகுதியை சேர்ந்த பொறியியல் முதுகலை மாணவி சாருகலா (22), நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். இவர் 3336 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரேவதி முத்துவடிவை விட 796 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் இன்று வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார்.

அதேபோல், செங்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு மேடு ஊராட்சி மன்ற தலைவராக அனு (21) பதவியேற்று கொண்டார். குற்றாலம் பராசக்தி கல்லூரியில் பிஏ முடித்துள்ளார்.

இளம் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒருபுறம் பதவியேற்றுள்ள நிலையில், தமிழகத்தின் மிக மூத்த பஞ்சாயத்து தலைவியாக நெல்லையைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் பதவியேற்றுக் கொண்டார்.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்துள்ளார்.

Views: - 174

0

0