டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தகவல்

17 July 2021, 10:31 pm
Minister KN Nehru- Updatenews360
Quick Share

சென்னை: இந்த வருடம் டிசம்பர் இறுதிக்குள் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டு, மனுத்தாக்கல் முடிந்து, வேட்புமனு பரிசீலனையும் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், பெண்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்ற காரணத்தை காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நிர்வகிப்பதற்கான சட்டவரைவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு தனி அலுவலர்கள் நியமனம்,

6 மாதங்களுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பான வழக்குகள் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தநிலையில், தமிழகத்தில் நகர்புற பகுதிகளை தவிர்த்து ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் சென்னையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இந்த வருடம் டிசம்பர் இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும்.

வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம் மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றில் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இந்தக் குற்றச்சாட்டுகளைக் களைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். அதேபோல் வாக்காளர் பட்டியல் சரி செய்யப்படும் பணியும் விரைவுபடுத்தப்படும்” என்றார்.

Views: - 110

0

0