இரண்டு மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு தனிமை கட்டாயம் : தமிழக அரசு அறிவிப்பு!!

25 February 2021, 11:51 am
Kerala Maharashtra - Updatenews360
Quick Share

கேரளா மற்றும் மராட்டியத்தில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் 7 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பின்னர் மெல்ல குறைந்த வந்த நிலையில் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்த வருபவர்கள் கட்டாயம் 7 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரளா, மகராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தமிழக வருவோர் கட்டாயம் 7 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 3 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Views: - 4

0

0