கும்மிடிப்பூண்டி அருகே டேங்கர் லாரி இருசக்கர வாகனத்தில் மீது மோதிய விபத்தில் இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சியில் இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர்கள், மேம்பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, டேங்கர் லாரி மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று பேர் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தில் உயிரிழந்த நபர்களை குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கும்மிடிப்பூண்டி இலங்கை மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த தயாளன்(19), சார்லஸ் (22) மற்றும் மதுரை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜான் (23) என்பதும், ஜான் தன்னுடைய உறவினர்கள் வீட்டிற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு வந்ததும், மூன்று பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் வீடியோ எடுத்துக் கொண்டு வேகமாக சென்றனர்.
அப்போது, மேம்பாலம் அருகே அதே திசையில் சென்ற டேங்கர் லாரியை முந்தி சென்றபோது நிலைத்தடுமாறி டேங்கர் லாரி மோதி மூன்று பேரும் உயிரிழந்தது தெரிய வந்தது. விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய டேங்கர் லாரி ஓட்டுனரை அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
This website uses cookies.