நடுரோட்டில் ஜோராக நடைபெற்ற லாட்டரி விற்பனை : மறைந்திருந்த போலீசிடம் சிக்கிய கும்பல்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2021, 11:19 am
Lottery Sales Arrest -Updatenews360
Quick Share

புதுச்சேரி : லாட்டரி விற்பனையை தடுக்க சென்ற காவல்துறையினர் மறைந்திருந்து 3 பேரை மடக்கி பிடித்தனர்.

புதுச்சேரியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை சரளமாக நடந்து வருகிறது. வடக்குபகுதிக்கு உட்பட்ட பகுதியில் லாட்டரி விற்பனையை கண்காணிக்க போலீஸ் சூப்பிரண்டு சுபம் சுந்தர் கோஸ் உத்தரவிட்டார்.

அதன்படி போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கோரிமேடு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், வெங்கடாஜலபதி ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

நேற்று இரவு குற்றப்பிரிவு போலீசார் ஹரிபிரசாத், சதீஷ் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது லாஸ்பேட்டை பக்கமுடையான்பேட் பகுதியில் வந்தபோது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்தனர்.

அவர்களை சோதனை செய்தபோது லாட்டரி சீட்டு விற்றவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் பஜனை மடம் கோயில் தெரு வெண்ணிலா நகரை சேர்ந்த டேனியல்@ சூசைராஜ் (வயது 44), மாரியம்மன் கோவில் தெரு வெண்ணிலா நகரரை சேர்ந்த மோகன்& சீனிவாசன் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் பணமும் மற்றும் 2 செல்போன்கள் லாட்டரி சீட்டுகள் கைப்பற்றப்பட்டன.

Views: - 387

0

0