எஸ்.பி.வேலுமணி பெயரை கூறியதும் பலத்த கைதட்டல் : அமைச்சரை செல்லமாக தட்டிக்கொடுத்த பிரதமர்..!

25 February 2021, 8:39 pm
Quick Share

கோவை: கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயரை கூறியதும் அரங்கத்தில் கைதட்டல் பலமாக இருந்தது.

கொடிசியா மைதானத்தில் பிரச்சாரத்திம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வந்தார். முன்னதாக அவர் கொடிசியா வளாகத்தில் தமிழகத்திற்கு புதிய நவீன உள்கட்டமைப்பு திட்டங்களை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், திட்டப்பணிகளை துவக்கி வைத்த பிரதமர், பின்னர் தனது உரையை தொடர்ந்து. அப்போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களின் பெயர்களை கூறினார். அந்த வரிசையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயரையும் பிரதமர் கூறினார். அப்போது கொடிசியா வளாகத்தில் அரங்கம் அதிரும் அளவுக்கு கை தட்டல்கள் எழுந்தது. மேலும், நிகழ்ச்சி முடிந்த பின்னர் விழா மேடையில் இருந்து இறங்கும் போது, அருகில் நின்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை செல்லமாக தோளில் தட்டி கொடுத்தபடி சென்றார் பிரதமர் நரேந்திர மோடி.

Views: - 8

0

0