நீட் பயிற்சி மையத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை… காதலுக்கு பெற்றோர் தடை போட்டதால் மனமுடைந்து விபரீதம்..!!

Author: Babu Lakshmanan
2 April 2022, 10:44 am
Quick Share

கோவை: கோவையில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆர்எஸ் புரம் அருகே உள்ள சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஸ்வேதா (19). இவர் கோவை கோவில்பாளையம் அருகே உள்ள வாரி மெடிக்கல் அகாடமியில் தங்கியிருந்து நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்தார். அதே மையத்தில் படிக்கும் மதுரையைச் சேர்ந்த மாணவர் ஒருவருடன் ஸ்வேதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வரவே அவர்கள் கண்டித்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரையிலிருந்து வந்த மாணவரின் பெற்றோர் அவரை மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.இதனால் காதலை பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் இருந்த சுவேதா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அவர் உடல்நிலை சரியில்லை என்று கூறி வகுப்புக்கு செல்லாமல் விடுதியில் உள்ள அறையில் இருந்தார்.

அப்போது வாழ்க்கையில் விரக்தியடைந்த ஸ்வேதா, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வகுப்பு முடிந்து அறைக்கு திரும்பிய மாணவிகள் அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது 50க்கும் மேற்பட்ட காதல் கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். பின்னர் சுவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோயில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Views: - 743

0

0