தற்கொலை முயற்சியில் தப்பித்தவரை கொல்ல முயற்சித்த மச்சான் : காதல் திருமணத்தால் வந்த வினை!!
8 April 2021, 1:16 pmதேனி : ஆண்டிப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த ஜோடிகளை பெற்றோர் பிரித்து வைத்ததால் தற்கொலை முயற்சி செய்த காதலனை நலம் விசாரிப்பதாக கூறி கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்த காதலியின் அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள நாச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி இவருடைய மகன் பெயர் வேல்முருகன். இவர் கல்லூரி படிப்பு முடித்துள்ளார். கல்லூரிப் படிப்பை முடித்த வேல்முருகன் திருப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதே நாச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சினி என்பவரை சில மாதங்களாக வேல்முருகன் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துள்ளனர்.மேலும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் நடந்ததால் இவர்கள் இருவரும் கரூரில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
மகளைக் காணாமல் போன விவரம் தெரிந்து ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் ரஞ்சனியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து ரஞ்சனியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆண்டிபட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையடுத்து கரூரில் இருந்த இருவரையும் அழைத்து வந்து ஆண்டிபட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். வேல்முருகன் மற்றும் ரஞ்சனியின் பெற்றோர் ஆலோசனைப்படி இருவரும் தனித்தனியாக அவரவர் வீட்டிற்கு செல்வதாக கூறியதால் ரஞ்சனியும் வேல்முருகனும் அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
தனது காதல் மனைவியை பிரிந்த ஏக்கத்தில் இருந்த வேல்முருகன் மன விராத்தியில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து நாச்சியாபுரம் அருகே உள்ள கண்மாய் பகுதியில் சென்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார்.
மயங்கிய நிலையில் இருந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த வேல்முருகனை பார்ப்பதற்காக ரஞ்சனியின் சகோதரர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
நலம் விசாரிப்பதாக கூறி சிகிச்சை பெற்று வந்த வேல்முருகனை கத்தியால் குத்தியதாக தெரியவந்துள்ளது இதனையடுத்து தகவல் அறிந்த க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0