ஒரே வங்கியில் பணிபுரிந்து போது லவ்.. பெண் கொலையில் பரபரப்பு திருப்பம்.. வெளிச்சத்திற்கு வந்த கள்ளக்காதல் விவகாரம்!!
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் பகுதி திண்டிவனம் புதுச்சேரி நான்கு வழி சாலையில் ஆண் சடலம் ஒன்று சாலையில் தலை நசுங்கி கிடப்பதாக கிளியனூர் காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த போலீசார், அந்த உடலின் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த வெள்ளை நிற கார் ஒன்றை திறந்து பார்த்தனர்.
அப்போது பெண் ஒருவர் காரின் உள்ளே கழுத்தில் குத்துப்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து இருப்பதை கண்ட போலீசார் இருவருது உடலையும் மீட்டு புதுச்சேரி கணகசெட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிம்ஸ் தனியார் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து, சம்பவ இடத்தில் உள்ள தடயங்களை சேகரத்தினர்.
முன்னதாக இருவரும் வைத்திருந்த வாகன ஒட்டுனர் உரிமம் மற்றும் அவர்கள் பணி புரிந்து வந்த தனியார் வங்கியின் (karur vysya bank) அடையாள அட்டைகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (37). இவருக்கு ஒரு மனைவி இரண்டு குழந்தைகள் என புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் வசித்து வந்த இவர் கரூர் வைசியா வங்கியின் மரக்காணம் கிளை மேலாளராக பணி புரிந்து வந்துள்ளார்.
அதே போல இறந்த பெண் மதுரா பாஃண்டிஸ் (34), அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் அவர் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கரூர் வைசியா வங்கி கிளையின் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வங்கியில் ஒன்றாக பணி புரிந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் கோபிநாதின் மனைவிக்கு தெரியவர அவர் கோபியை கண்டித்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று மாலை கோபிநாதும், மாதுராவும் புதுச்சேரி திண்டிவனம் சாலை கிளியனூர் பகுதிக்கு காரில் வந்ததில் மதுரா திருப்புலியால் (screw driver) கழுத்தில் குத்தப்பட்டு இரத்த வெளத்தில் உயிரழந்திருப்பதும், கோபி கார் அருகே சாலையில் அடையாளம் தெரியாத வாகனத்தால் தலை நசுங்கி உயிரிழந்திருப்பதும் போலீசார்க்கு முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,
மேலும் மதுராவை கோபி திருப்புலியால் குத்தி கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர்களுக்குள் ஏதேனும் வாக்குவாதம் நடைபெற்றதில் மதுரா தன்னை தானே திருப்புலியால் குத்தி கொண்டதை பார்த்து அச்சம் அடைந்த கோபி சாலையில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த கள்ள காதல் விவகாரத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அவர்கள் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.