7 ஆயிரம் பேருக்கான மதிய உணவு திட்டம் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்!!

13 July 2021, 7:12 pm
Lunch Scheme SP Velumani - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி வேலுமணி, 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடையும் விதமாக மதிய உணவு திட்டத்தை இன்று துவக்கி வைத்தார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம், லாலி ரோடு பகுதியில் துவங்கி பெரிய மாரியம்மன் கோவில், ஸ்கீம் ரோடு, பால்கம்பணி, போன்ற பகுதிகளிலும், மேலும் தெலுங்கர் வீதி, இடையர்வீதி, ராமகிருஷ்ணாபுரம், கோபால் லே அவுட் போன்ற இடங்களிலும் முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார்.

மேலும் நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் விதமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை வழங்கினார். ஏற்கனவே தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் முன்னாள் அமைச்சர் இந்த இலவச மதிய உணவு திட்டத்தை துவங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 130

0

0