உடுமலை அருகே சொகுசு காரில் திடீர் தீ : தனியார் பள்ளி ஆசிரியர் உயிர்தப்பினார்!!

8 February 2021, 11:40 am
Tirupur Car Fired - Updatenews360
Quick Share

திருப்பூர் : உடுமலை அருகே சொகுசு காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்த தனியார் பள்ளி ஆசிரியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் அருகே ஆசிரியர் ஒருவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போதே காரில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதை கண்டவுடன் ஆசிரியர் காரை விட்டு இறங்கி விட்டார். சிறிது நேரத்தில் கார் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஆனால் கார் முற்றிலும் எரிந்து சேதமானது காரை ஓட்டி வந்த தனியார் பள்ளி ஆசிரியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்திற்கு காரணம் தெரியாத நிலையில் தீயணைப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 2

0

0