சாக்கடையில் தானாக விழுந்த சொகுசு கார்!!

22 August 2020, 5:14 pm
Car - Updatenews360
Quick Share

திருப்பத்தூர் : வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் உணவகம் முன்பாக நிறுத்தி இருந்த சுகுசு கார் தானாக இயங்கி அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் பாயிந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் உணவகம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் தானாக இயங்கி அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் பாயிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்ட மேட்டூர் பகுதியை சேர்ந்த தயாநிதி. இவர் தொழில் ரீதியாக வேலூர் மாவட்டம் வேலூருக்கு காரில் சென்று மீண்டும் ஊர் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் உணவகம் முன்பாக காரை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரிடம் இருந்த காரின் ரிமோட் பட்டன் எதிர்பாராதவிதமாக அமுங்கியது. இதனை தொடர்ந்து கியரில் நிறுத்தப்பட்டிருந்த கார் தானாக இயங்கி அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் பாயிந்தது.

அப்போது அங்கே இருந்தவர்கள் ஓட்டுனர் இல்லாமல் கார் தானாக இயங்கி கால்வாயில் பாய்ந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பகுதிமக்கள் சுமார் ஒருமணி நேரம் போராடியும் காரை மீட்க்க முடியாததால் கிரேன் இயந்திரம் உதவியுடன் காரை கால்வாயில் இருந்து வெளியில் எடுத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.