வந்தா, சுட்டா, போனா, REPEAT.. எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் மாநாடு : SJ சூர்யா போட்ட டுவிட்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 October 2021, 4:26 pm
Maanaadu SJ Suryah-Updatenews360
Quick Share

தீபாவளி நாளில் வெளியாகவில்லை என்றாலும் மாநாடு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பு எழுந்து நிலையில் எஸ்ஜே சூர்யாவின் டுவிட் அதை உறுதிசெய்துள்ளது.

வரும் தீபாவளி நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படம் வெளியாகவுள்ளது. பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படம் வெளியாகும் போது மற்ற படங்கள் பின் வாங்குவது சகஜமான விஷயம். வசூல் ரீதியாக பாதிப்படையும் என்பதால் சிறு பட்ஜெட் திரைப்படங்கள் தள்ளி வைக்கப்படும்.

ஆனால் இம்முறை தீபாவளியன்று விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் அண்ணாத்தவுடன் மோத உள்ளது,. மேலும் நடிகர் சிம்புவின் மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திற்காக திரையரங்குகள் கிடைக்கவில்லை என ஏற்கனவே எனிமி திரைப்பட குழு வருத்தம் தெரிவித்த நிலையில் மாநாடு தள்ளிப்போவது குறித்து சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் மற்றும் அவரது மனைவி பரபரப்பு புகார் அளித்தனர். வேண்டுமென்றே சிம்புவின் படத்தை குறி வைத்து ஒதுக்குவதாகவும் கூறினர்.

இந்த பரபரப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மாநாடு படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்புகளை ஏற்படுத்திய நிலையில், படம் எப்போது வெளியாகும் என காத்திருந்தனர். படத்தின் ட்ரெய்லர் வெளியானதும் பரபரப்பாக பேசப்பட்டவர் இயக்குநர் எஸ்ஜே சூர்யா.

சமீப காலமாக இவர் நடிக்கும் படங்கள் விமர்சன ரீதியாக வியாபர ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இவரின் நடிப்பும் பாரட்டுக்குரியதாக அமைகிறது. மாநாடு படத்தின் ட்ரெய்லரிலும் எஸ்ஜே சூர்யா அசத்தியிருப்பார். அவரின் நடிப்புக்காக தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளதால் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த நிலையில் இயக்குநரும் நடிகருமான எஸ்ஜே சூர்யா, 8 நாட்கள் படத்தின் ரெக்கார்ட் வேலையை 5 நாளில் முடித்துள்ளேன். டப்பிங் பேசி நாடி நரம்பு, கழுத்து என வலிகள் பின்னுது.. ஆனால் முழுப்படத்தை பார்த்ததிற்கு பின் சொல்கிறேன் நிச்சயமாக வரும் 25ஆம் தேதி தான் தீபாவளி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனால் மாநாடு படத்திற்கு மாஸ் எகிறிக்கொண்டே போகிறது. கடினமாக படத்திற்கு உழைத்துள்ளதாக சூர்யா டுவிட் செய்துள்ளது ரசிகர்களிடையே படத்தை பார்க்க ஆவலை தூண்டியுள்ளது.

Views: - 253

0

0