திமுகவின் கைக்கூலி தான் மதன் ரவிச்சந்திரன்: வேலூர் இப்ராஹிம் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

Author: Aarthi Sivakumar
31 August 2021, 1:04 pm
Quick Share

கோவை: கே.டி.ராகவனின் வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் திமுக.,வின் கைக்கூலி என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் இன்று வி.கே. கே. மேனன் சாலையில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் வைத்து சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராஹிம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது,

ராகவனுடைய வீடியோ வெளியிட்ட பாஜகவைச் சேர்ந்த மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அதை விரைவில் பத்திரிக்கையாளர்களிடம் வெளியிடுவோம். தமிழகத்தில் மக்கள் ஆதரவோடு வளர்ந்து வரக்கூடிய பாஜகவின் உடைய வளர்ச்சியை தடுக்க திமுக செய்த சூழ்ச்சியே இதற்கு காரணம்.

‘நம்ம ஆட்டோ’ நிறுவனர் தன்னை பா.ஜ.க.,வில் இணைத்து கொள்ள உள்ளார். வரும் செப்.19ம் தேதி ஆயிரம் இஸ்லாமியர்களும் கட்சியில் இணைகிறார்கள். இந்து சமய நம்பிக்கைகளை கேலி செய்வதும் வழிபாட்டு உரிமைகளை தடுப்பதும் திமுக தொடர்ந்து செய்கிறது வெள்ளி சனி வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை. ஆனால், டாஸ்மாக் மூலம் குடிகாரர்களை உருவாக்குகிறது.

விநாயகர் சதூர்த்தி விழாவை மக்கள் மத நம்பிக்கையின் வெளிப்பாடாக கொண்டாடும் நிலையில் திமுக அரசு தடை செய்வது கண்டனத்திற்கு உரியது. இந்து மக்கள் புனிதத்தை பேணுவதற்கு கோரிக்கை வைத்துள்ளோம். திமுக பல வாக்குறுதிகளை கொடுத்தது. ஆனால் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

ஏழை பெண்களுக்கு மாதம் 1000 தருவதாக கூறிவிட்டு குறிப்பிட்ட ஒரு சிலருக்கு என்கிறார்கள். மின் தட்டுப்பாடு மாநிலம் என்கிறார்கள். அரசியல் அநாகரீகமான பேச்சுக்கள் தொடர்கிறது. காவல்துறை மூலம் பொய்வழக்கு போட்டு பா.ஜ.க தொண்டர்களை கைது செய்து கட்சியின் வளர்ச்சியை நிறுத்தலாம் என்று நினைக்கிறது. அது நடக்காது.

விநாயகர் சதூர்த்தி இந்து முன்னணி உட்பட பரிவார் அமைப்புகள் கொண்டாடும். நாங்கள் முழு ஆதரவு கொடுப்போம். விதிமுறைகளோடு கலந்து கொள்வோம். மதன் ரவிச்சந்திரன் பா.ஜ.க.,வில் உறுப்பினராக மட்டுமே இணைந்தார். திமுக.,வின் தோல்வியை மறைக்க மதன் ரவிச்சந்திரனை கைக்கூலியாக மாற்றி இந்த இழிவான செயலை செய்துள்ளனர்.

திமுக அமைச்சர்கள், எம்.பி.,க்கள் பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொண்ட வீடியோக்கள் எல்லாம் வந்தது. ஆனால் அரசியலில் இதெல்லாம் சாதரணம் என்பது போல் அப்போது திமுக காட்டிக் கொண்டது. சம்மந்தப்பட்ட அந்த பெண் கே.டி.ராகவனை மூளைச்சலவை செய்திருக்க வேண்டும். ஒரு பெண் முன்னால் யாரும் திடீரென நிர்வாணமாக நிற்க மாட்டார்கள். இதில் கே.டி.ராகவன் பலியாடாக சிக்கினார்.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தான் எங்கள் நிலைப்பாடாக உள்ளது. எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட தீவிரவாத, பிரிவினைவாத சித்தாந்தம் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் கோவையில் உள்ள மக்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் என பாகுபாடின்றி ஒற்றுமையுடன் வாழ விரும்புகின்றனர் என அவர் கூறினார்.

Views: - 227

0

0